புதிய கீதை
எது கிடைத்ததோ அது
நன்றாகவே கிடைத்தது எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகவே கிடைக்கவில்லை
எதை நீ கேட்காமலிருந்தாய்
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்
அது நியாயமாய் கிடைப்பதற்கு
எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்துவிடும்
அடுத்த நாள் வெறுத்து விடும்
கிடைப்பதன் அருமை அது
கிடைக்கும் நொடி வரை தான்
அடுத்த நொடி நீ
வேறொன்றுக்கு ஆசைபடுவாய்
ஆகவே கேட்க்காமலிறு அல்லது
இருப்பதை கொண்டு சந்தோசப்படு!
இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாராம்சமும் ஆகும்...
சம்பவாமி யுகே! யுகே!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home